மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி அமைச்சர் ஆய்வு
30-Oct-2024
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக பாலம் அறிவிப்பு வந்தும் பணிகள் துவங்காததால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.2021ல் கலெக்டர் அலுவலக பாலம் அமைக்க மண் பரிசோதனை நடந்தது. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் பணிகள் துவங்குவதாக கூறிய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் கூறி வந்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக பாலம் தற்போது வரை அமைக்கப்படாமல் உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் அதிகளவில் நான்கு வழிச்சாலையை கடந்தன. நேற்று முன் தினம் காலை முதல் இரவு முழுவதுமே வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் இருந்தது. கூரைக்குண்டு பகுதி, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நான்கு வழிச்சாலையை கடக்க சிரமப்பட்டனர். கலெக்டர் அலுவலக பாலம் தொடர்பான அறிவிப்பு பணிகள் இந்தாண்டு வந்தது. ஆனால் தற்போது வரை எந்த பணியும் துவங்கவில்லை. ஏற்கனவே டெல்லி வரை திட்ட வரையறை சென்று ஒப்புதலானதாக அதிகாரிகள் கூறினர். பின் பாலம் உயரத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டதால் அதற்கேற்ப பணிகள் நடந்து வருகிறது.மேலும் புதிய கலெக்டர் அலுவலகம் வேறு திறக்கப்பட உள்ளதாலும், வெளியிடங்களில் உள்ள பல அரசு அலுவலகங்கள் புதிய கட்டடத்திற்குள் வர உள்ளதால் வரும் நாட்களில் இன்னும் மக்கள், ஊழியர்கள் நடமாட்டம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. எனவே பால பணிகளை விரைந்து துவங்குவது மட்டும் தான் இதற்கு தீர்வு. மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் பரிந்துரைத்து அறிவித்ததை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
30-Oct-2024