உள்ளூர் செய்திகள்

கல்லூரி செய்திகள்

விளையாட்டு விழாசாத்துார்: சாத்துார் எஸ். ஆர் .எம். கல்லுாரியில் 54 ஆவது விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார். ராஜபாளையம் ராஜுக்கள் கல்லுாரி முதல்வர் வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் குமார் விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் . ஸ்ரீதேவி வரவேற்றார். மாரித்தாய் நன்றி கூறினார்.கல்லுாரி கலை நிகழ்ச்சிகள்சாத்துார்: சாத்துார் மேட்டமலை கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கல்லுாரிகள் அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி தலைவர் ராஜு தலைமை வகித்தார்.செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார். வணிகவியல் மற்றும் வணிக கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் பிரவீனா வாழ்த்தினார். காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் இயக்குனர் ஆறுமுகச்செல்வன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பேராசிரியர் அபிராம லட்சுமி நன்றி கூறினார்.----பள்ளி ஆண்டு விழாராஜபாளையம்: ராஜபாளையம் கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பி.எஸ். குமாரசாமி ராஜா மண்டபத்தில் நடந்தது. தாளாளர் வைமா திருப்பதி செல்வன் தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி அருணா தேவி முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் ஸ்ரீதர் மாணவர்களை வாழ்த்தி பேசினார். ஜே சி ஐ முன்னாள் தேசிய தலைவர் கார்த்திகேயன் போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கினர். முதல்வர் திருமலைராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் பானுப்பிரியா வரவேற்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஆசிரியை சித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை