உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் பற்றாக்குறை நீடிப்பு 5 மாதங்களாக பணிகள் பாதிப்பு

 அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் பற்றாக்குறை நீடிப்பு 5 மாதங்களாக பணிகள் பாதிப்பு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் துாய்மை, பாதுகாப்பு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் செய்து வந்தனர். இதனால் வளாகத்தின் பாதுகாப்பு, வெளி நோயாளிகள் பிரிவுகள், வார்டுகள், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு இடமாற்றம் செய்தல், அவர்களை எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்து செல்லுதல், ரத்த பரிசோதனை முடிவுகளை வாங்கி வருதல், இனிமோ கொடுத்தல் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் டெக்னீசியன், உதவியாளர், பிளம்பிங், எலக்ட்ரீசியன், லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட பல்வேறு பணியிடங்கள் அரசாங்காத்தால் நிரப்பப்படாததால் இதே தனியார் ஒப்பந்த நிறுவனத்தினரால் ஊழியர்களாக நியமிக்கப்பட்டு அன்றாட பணிகள் நடந்தது. இதையடுத்து தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு மே இறுதியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதனால் 132 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதன் பின் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு குறைதீர் முகாமிலும் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். மேலும் பணியில் உள்ள துாய்மை பணியாளர்கள் செப்.1ல் மருத்துவமனை வாயில் முன்பு கூடுதல் பணியாளர்கள் நியமித்தல், பழைய நிறுவனம் வழங்கிய ஊதியம் வழங்குதல், மாதத்திற்கு இரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 5 மாதங்களை கடந்தும் நீடிக்கும் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தினசரி அன்றாட துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு, பணியாளர்கள் பணிச்சுமையுடன் பணி புரியும் நிலை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை