உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சித்தமநாயக்கன்பட்டியில் கதிரடிக்கும் களம் சேதம்

 சித்தமநாயக்கன்பட்டியில் கதிரடிக்கும் களம் சேதம்

சிவகாசி: சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியில் கதிரடிக்கும் களம் சேதமடைந்திருப்பதால் விவசாயிகள் பயிர்களை பிரித்தெடுக்க இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். சிவகாசி அருகே சித்தமநாயக்கன்பட்டியில் மக்காச்சோளம், நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் விவசாயிகள் பயிரிடுகின்றனர். அறுவடை காலங்களில் பயிர்களை காய வைத்து பிரித்தெடுப்பதற்காக இங்கே கதிரடிக்கும் களம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கதிர் அடிக்கும் களம் சேதம் அடைந்துள்ளது. சிமென்ட் பெயர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளி பாராகவும் மாறி வருகின்றது. இதனால் விவசாயிகள் பயிர்களை பிரித்து எடுப்பதற்கு இடம் இன்றி சிரமப்படுகின்றனர். தற்போது விவசாய காலம் துவங்கியுள்ள நிலையில் பயிர்களை காய வைக்க, பிரித்தெடுக்க களம் தேவைப்படும். எனவே இங்குள்ள கதிர் அடிக்கும் களத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை