உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்படாத சுகாதார வளாகம், பள்ளமான ரோடு விருதுநகர் நகராட்சி 22 வது வார்டு மக்கள் அவதி

செயல்படாத சுகாதார வளாகம், பள்ளமான ரோடு விருதுநகர் நகராட்சி 22 வது வார்டு மக்கள் அவதி

விருதுநகர்;சுகாதார வளாகத்தை திறந்து செயல்படுத்தாததால் திறந்த வெளி கழிப்பிடம் அதிகரிப்பு, துாய்மை பணியாளர்கள் வீடுகளில் குப்பை சரியாக பெறாததால் சுகாதாரக்கேடு, வீடுகளுக்கு சரியாக வழங்கப்படாத குடிநீர் என பல பிரச்னைகளில் தவித்து வருகின்றனர் விருதுநகர் 22 வது வார்டு மக்கள்.இந்த வார்டில் பெருமாள் கோயில் தெரு, அண்ணாமலை செட்டியார் தெரு, ஓடைத்தெரு, மாரிமுத்து சந்து உள்ளிட்ட 10க்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. பெருமாள் கோயில் தெரு சுகாதார வளாகம் கட்டிய சில மாதங்களிலேயே மோட்டார், டேங்க் பழுது எனக்கூறி பூட்டி விட்டனர்.கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் இரவு நேரங்களில் திறந்த வெளிக்கு செல்ல வேண்டி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாதாளச்சாக்கடைகளை சரியாக சுத்தம் செய்யவில்லை. வீடுகளுக்கு வந்து குப்பை பெற்று செல்லும் துாய்மை பணியாளர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை. இதனால் தெருவின் ஒரங்களில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குகின்றனர். தெருக்களில் பேவர் பிளாக் கற்களால் அமைக்கப்பட்ட ரோடுகள் சரியாக அமைக்கப்படாததால் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பள்ளங்களாக உள்ளன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் இடறி விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது.அடிகுழாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

குப்பை வாங்க வேண்டும்

வார்டில் உள்ள வீடுகளில் துாய்மை பணியாளர்கள் முறையாக குப்பையை பெற்று செல்வதில்லை. இதனால் தெருக்களின் ஓரங்களில் குப்பை கொட்டி கிடங்காக மாற்றி வருகின்றனர்.- கணேசன், அ.ம.மு.க., பிரமுகர்.

செயல்படுத்துங்க

பெருமாள் கோயில் தெருவில் உள்ள சுகாதார வளாகத்தை பல ஆண்டுகளாக பூட்டியே வைத்துள்ளனர். இதனால் வீடுகளில் கழிப்பிடம் இல்லாதவர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மணிகண்டன், ஆட்டோ டிரைவர்.

விலைக்கு குடிநீர்

வீடுகளுக்கு தேவையான குடிநீர் வினியோகத்தை வழங்க மினரல் குடிநீர் பிளான்ட் அமைக்க வேண்டும். இதனால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலையை மாற்ற முடியும்.- ராகவன், ஆட்டோ டிரைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை