உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களுக்கு பதில் தாமதம்: உரிய நேரத்தில் கிடைக்காமல் தவிக்கும் சூழல்

தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களுக்கு பதில் தாமதம்: உரிய நேரத்தில் கிடைக்காமல் தவிக்கும் சூழல்

பொதுமக்கள் அரசு துறைகளில் நடந்த வளர்ச்சி பணிகள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அரசியல் தலைவர்களின் விவரங்கள், நடந்த சம்பவங்கள் என யாருக்கு என்ன விவரங்கள் தேவைப்படுகிறதோ, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பித்து தகவல்களை பெற சட்டம் கொண்டுவரப்பட்டது.விண்ணப்பித்த நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய தகவல்களை தர வேண்டும் என்பது விதி. துவக்கத்தில் இச்சட்டத்தின் படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகவல்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பி வந்தனர். நாட்கள் செல்ல செல்ல தகவல் அறியும் உரிமைச் சட்டம் மணுக்கள் மீது உரிய நாட்களுக்குள் பதில் தருவது கிடையாது.ஒரு சில துறை அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்படுகின்றனர். 30 நாட்களைக் கடந்தும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக நடந்த பணிகள் குறித்து விவரம் கேட்டால் அதற்கு முறையான பதில் அளிப்பதில் காலதாமதப்படுத்துகின்றனர்.விண்ணப்பங்கள் குறித்து நேரடியாக தொடர்பு கொண்டு கேட்கும் விண்ணப்பதாரர்களை சிலர் அவமரியாதை செய்வதுடன், அவர்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்யாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவது, அலைக்கழிப்பது என மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதே நிலைமை தான் வருவாய்த்துறை, போக்குவரத்து துறை, போலீஸ் துறைகளிலும் உள்ளது.இச்சட்டத்தின் நோக்கமே தவறுகள் நடக்கும் போக்கை குறைப்பதற்காக தான். தற்போது அதன் நோக்கம் சிதைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அரசுத் துறையிலும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் விண்ணப்பங்களின் நிலை என்ன என்பதை அறிந்து, அளிக்கப்பட்ட பதில்கள் என்ன, காலதாமத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்.அலட்சியம் செய்பவர்கள் மீது மேல்முறையீடு செய்தால் என்ன வகையான சட்டதிட்டங்களின் கீழ் பாதிக்கப்படுவர் என்கிற விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். அலட்சியப்போக்குடன் செயல்படாமல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக பதில் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ