மேலும் செய்திகள்
விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
2 minutes ago
போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம்
2 minutes ago
பால் கொள்முதல் விலையை உயர்த்த கேட்டு ஆர்ப்பாட்டம்
11 minutes ago
இ ன்றைய உலகில் சர்க்கரை நோய் அதிகமானோருக்கு வந்துள்ளது. சர்க்கரை நோய் பற்றி மக்கள் அறிந்திருந்தாலும் அதன் பாதிப்புகள் பற்றி தெரியாமலும் அலட்சியமாகவும் உள்ளனர். சர்க்கரை நோயின் முக்கிய பாதிப்பு ரத்த குழாய் அடைப்பு. முறையான கட்டுப்பாட்டுடன் சர்க்கரை அளவை வைத்துக் கொண்டால் இப்பாதிப்பு வராது. நோயின் தாக்கம் அதிகமானால் ரத்த குழாய்கள் பாதிப்படைந்து எந்நேரமும் உறுப்புகள் சேதமடையலாம். சர்க்கரை நோயினால் பாதிப்பு அடையக்கூடிய முக்கிய உறுப்பு கால் விரல்கள். அவற்றில் வீக்கங்கள் ஏற்பட்டு, புண் ஆறாமல் இருக்கும். முகத்தை எத்தனை முறை கண்ணாடியால் பார்க்கின்றோமோ அதுபோல் கால் பாதத்தையும் பார்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியில் சென்று வந்தபின் கால் பாதத்தில் அடிபட்டுள்ளதா, ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்பதை பார்க்க வேண்டும். கால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அனைவருமே பாதத்தின் மீது கவனமாக இருக்க வேண்டும். வீக்கம், சிவந்து இருந்தாலும் உடனடியாக சர்க்கரை நோய் நிபுணரை பார்த்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் கிருமித் தொற்று எளிதாக உடலில் பரவி ரத்தக் குழாய் அடைப்புகள் வருவதற்கு வழிவகுக்கும். இரத்தக் குழாய்கள் அடைப்பு ஏற்பட்டால் விரல்கள் அழுகி அவற்றை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். என்னிடத்தில் வரும் 30 நோயாளிகளில் 15 பேர் காலில் புண்களுடன் வருகின்றனர். அவர்களில் 4, 5 பேருக்கு விரல்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சர்க்கரை அளவை சரியான முறையில் வைத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. முறையான உடற்பயிற்சி, உணவு முறையை பின்பற்றி சர்க்கரை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். -- - டாக்டர் ஜீ.தீபன் விருதுநகர் 04562 - 265 222
2 minutes ago
2 minutes ago
11 minutes ago