உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏ.ஐ.டி.யு.சி., ஆண்டு விழா

ஏ.ஐ.டி.யு.சி., ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டியு.சி., ஏழாவது ஆண்டு விழா, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி சங்க கொடியினை ஏற்றினார். இதையொட்டி நடந்த ஊர்வலத்தை, சம்மேளன பொது செயலர் ஜே.லட்சுமணன், தலைவர் கே.எம். செல்வராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். தென்காசி எம்.பி., லிங்கம்,பொன்னுபாண்டியன்எம்.எல்.ஏ., ஏ.ஐ.டி. யு.சி., துணை பொது செயலர் மூர்த்தி, முன்னாள் எம்.பி., அழகிரிசாமி கலந்து கொண்டனர். இதன் பின் ஸ்ரீவைஷ்ணவா திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணப்பலன்கள் வழங்கமுடியாத நிலையில், அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசே பென்ஷன் நேரடியாக வழங்க வேண்டும். விபத்தை காரணம் காட்டி ஓட்டுனர்களுக்கு பணி வழங்க அரசு முன் வர வேண்டும். டூட்டி பேட்ஜில் சுழற்சி முறையை சீனியாரிட்டிப்படி வழங்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை