உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

 ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே செங்குளம் கண்மாய் செல்லும் ஓடையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே பழைய வெள்ளையாபுரம் ரோட்டில் செங்குளம் கண்மாய் செல்லும் ஓடை பெரிய கிடங்காக உள்ளது. இப்பகுதியில் வாறுகால் இல்லாததால் பாண்டியன் நகர், சத்யா நகரின் மொத்த கழிவுகளும் இங்கு வந்து தேங்குகின்றது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டு முழுமையாக நிறைந்துள்ளது. இதனால் கிடங்கு கொசு உற்பத்தி கேந்திரமாக மாறிவிட்டது. அருகிலேயே மாநகராட்சி மண்டல அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமிஷனர் சரவணன், மாநகர் நல அலுவலர் ஸ்ரீதேவி, சுகாதார அலுவலர்கள் சுரேஷ், திருப்பதி தலைமையில் கிடங்கில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது மேலும் கழிவுநீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ