உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒரே நாளில் 40 பேரை கடித்த நாய்கள்

ஒரே நாளில் 40 பேரை கடித்த நாய்கள்

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் நேற்று முன்தினம், 40 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் மாலை முதியோர், சிறுவர்கள், பெண்கள் என 40க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு உள்ளாகினர். பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத் துறையினர், நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ராஜபாளையம் அரசு மருத்துவ அலுவலர் மாரியப்பன் கூறுகையில், ''நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு, 'ரேபிஸ்' தடுப்பூசியும், பாதிப்பு அதிகம் உள்ள ஏழு பேருக்கு உள்நோயாளியாக சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை