உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டவுன் பஸ்சின் பின் பகுதியில் ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி 4 பேர் காயம்

டவுன் பஸ்சின் பின் பகுதியில் ஆட்டோ மோதியதில் டிரைவர் பலி 4 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பஸ் ஸ்டாப்பில் நின்ற பஸ்சின் பின்பகுதியில் ஆட்டோ மோதியதில் டிரைவர் யேசுராஜா 19, உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் 41, பிரபாகரன் 30, உதயகுமார், ராஜா 19 ஆகியோர் ஆட்டோவில் கூமாபட்டிக்கு சென்றனர். நேற்று காலை 10:40 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் கூட்டுறவு மில் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நின்ற போது பின்னால் வந்த ஆட்டோ பஸ்சின் பின்பகுதியில் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் யேசுராஜா சம்பவ இடத்தில் பலியானார். மற்றவர்கள் லேசான காயமடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி