மேலும் செய்திகள்
ஸ்ரீவி., வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை
26-Sep-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் குறவன் குட்டை பகுதியில் நடமாடிய யானையை வனத்துறையினர் வனத்திற்குள் விரட்டி விட்டனர். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்த யானைகள் தற்போது சில நாட்களாக அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் மாலை நேரத்தில் வந்து மா, வாழைகளை சேதப்படுத்துகிறது. யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரு யானை குறவன் குட்டையில் நடந்து சென்றுள்ளது. அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் செல்வமணி தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
26-Sep-2025