உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பயிர் சேத இழப்பீடு வரப்பெற்றும் கிடைக்காததால் விவசாயிகள் கவலை

பயிர் சேத இழப்பீடு வரப்பெற்றும் கிடைக்காததால் விவசாயிகள் கவலை

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் பயிர் சேதத்திற்கான இழப்பீடு வரப்பெற்றும் விவசாயிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை படுகின்றனர்.சாத்துார் வட்டாரத்தில் 2023 டிச.17, 18 ல் பெய்த பலத்த மழை காரணமாக உளுந்து, பாசிபயறு பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலன் மற்றும் வேளாண்த் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பயிர் பாதித்த விவசாயிகளுக்கு விரைவில் உரிய இழப்பீடு தொகை அரசிடம் இருந்து பெற்று தரப்படும் என்றும் உறுதி அளித்தனர்.தற்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி அறிவித்துள்ளது. இந்தநிலையில் சாத்துார் வட்டாரத்தில் உள்ள எந்த ஒரு விவசாயிக்கும் இழப்பீடு தொகை இன்று வரை அவர்களது வங்கி கணக்கில் வரவாகவில்லை. கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் கிடைக்க காலதாமதம் ஆவதால் மனவேதனை அடைந்துள்ளனர்.என்.மேட்டுப்பட்டி தனுஷ்கோடி ராஜ் விவசாயி கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்திற்கு இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு வழங்க வந்துள்ள போதும் சாத்துார் வட்ட வேளாண்மை துறை, தோட்டத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது. மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைத்து விட்டநிலையில் சாத்துார் பகுதியில் தாமதம் ஆவதால் இழப்பீடு தொகைக்காக காத்திருக்கும் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை