உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அச்சம்: சேதமான நிழற்குடைகளில் ஒதுங்க தயங்கும் மக்கள்: கோடைகாலத்திற்குள்ளாவது பராமரிக்க எதிர்பார்ப்பு

அச்சம்: சேதமான நிழற்குடைகளில் ஒதுங்க தயங்கும் மக்கள்: கோடைகாலத்திற்குள்ளாவது பராமரிக்க எதிர்பார்ப்பு

மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் நுாறு டிகிரி பாரன் ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது. மதிய நேரங்களில் அனல் காற்றால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். இத்தகைய சூழலில் மக்கள் பகல் நேரங்களில் தேவையின்றி அலைவதை குறைத்து வருகின்றனர்.இருப்பினும் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், பணி நிமித்தமாகவும் சென்று வருவது தவிர்க்க முடியாதது. இப்போதெல்லாம் காலை 8:00 மணிக்கே 94 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.இந்நிலையில் அவசியம் வெளியில் செல்ல வேண்டி உள்ள கிராமப்புற மக்கள் பஸ்சுக்காக நிழற்குடையில் காத்திருக்க வேண்டும். ஆனால் ஊரகப் பகுதிகளில் பெரும்பாலான நிழற்குடைகள் கூரைகள், தரைத்தளங்கள் சேதம் அடைந்துள்ளன. நல்ல நிலையில் உள்ளவற்றில் மதுபாட்டில்கள், சிகரெட் போன்ற குப்பை கூளங்கள் காணப்படுகின்றன.இதனால் பெண்கள், முதியவர்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் பயணிகள் பல நேரங்களில் வெயிலில் வெளியே காத்து நிற்கின்றனர். பொருட்கள் வாங்க வெளியே சென்று விட்டு ஊர் திரும்புவதற்கு படாத பாடு படுகின்றனர். பல கிராமங்களில் நிழற்குடைகள் இன்று வரை போதிய பராமரிப்பின்றி துாய்மை பணிகள் செய்யாமல் உள்ளனர்.தற்போது அக்னி நட்சத்திரம் அடித்து வரும்வெயிலின் உக்கிரம் அதிகமாகஉள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து நிழற்குடைகளை மராமத்து, துாய்மை பணிகள் செய்ய வேண்டும். இதை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் செய்தால் மக்கள் நலன் பாதுகாக்கப்படும்.மேலும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர்க்க முடியாமல் வெயிலில் வரும் முதியவர்களுக்கு உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை