உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிப். 19 ல் மகளிர் தொழில் முனைவோர் முகாம்

பிப். 19 ல் மகளிர் தொழில் முனைவோர் முகாம்

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்துசேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் பிப். 19 கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் நடக்கிறது.புதிதாக தொழில் துவங்கும் பெண்களும், ஏற்கனவே துவங்கிய தொழிலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல விரும்பும் பெண்களும் பங்கேற்கலாம். இம்முகாம் பற்றிய விவரங்களுக்கு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலரை, 94899 89425 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அலுவலகத்திலோ நேரில் சென்று அறிந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க பிப். 15க்குள் முன்பதிவு செய்வது கட்டாயம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ