உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆட்டுக் கொட்டகையில் தீ

ஆட்டுக் கொட்டகையில் தீ

திருச்சுழி : திருச்சுழி அருகே ஆட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.திருச்சுழி அருகே கொட்டம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு ஆட்டு கொட்டகை உள்ளது. இதன் அருகே குப்பைகள், ஆடுகளின் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. நேற்று காலை திடீரென்று குப்பை கழிவுகளில் தீ பிடித்தது. திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை