உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xyz0bj7g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று (மே 9) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 7 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடி விபத்தில் 4 ஆண்கள், 6 பெண்கள் என 10 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாசு தொடர்ந்து வெடித்து வருவதால் மீட்பு பணி தாமதம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Jai
மே 09, 2024 21:28

மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. பாதுகாப்பு முறைகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிக்கப்பட வேண்டும்.


kumar
மே 09, 2024 17:16

இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா, என்ன அரசாங்கம், காவல் துறை, சட்டம் நீதி துறை


R Kay
மே 09, 2024 16:38

மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை Law enforcement agencies தயவுசெய்து இது போன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஏசி அறையில் அமர்ந்துகொண்டு கையூட்டு பெற்றுக்கொண்டு அறிக்கைகளையும் லைசென்ஸ்களையும் தராமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கவும்


Svs Yaadum oore
மே 09, 2024 16:02

கடந்த சில நாட்களில் இது இரெண்டாவது வெடி விபத்து இதை பற்றி இந்த விடியல் ஆட்சியில் எவனாவது கவலை தெரிவிக்கிறானா அல்லது நடவடிக்கை என்று எதாவது உள்ளதா?? மக்கள் அடிபட்டு சாக வேண்டியதுதான் காட்டுமிராண்டிகள் ஆட்சி நடக்குது இங்குள்ள மக்களுக்கும் இது போல் போதை சாராயம் கஞ்சா வெடி விபத்து என்று தினம் தினம் நன்றாக அடி வாங்கினால்தான் திருந்துவார்கள் இல்லையென்றால் திராவிட மாயையிலிருந்து திருந்த மாட்டார்கள்


rsudarsan lic
மே 09, 2024 15:47

ஐயோ எந்த நீதிமன்றமும் கண்டு கொள்ளாதா ?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ