காட்டுப்பன்றியை சுட்ட வனத்துறையினர்
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியை பிடிக்க ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் முருகன் தலைமையில் வனச்சரக அலுவலர் செல்லமணி, கார்த்திக்ராஜா, வனவர் பெரியசாமி, மாயதுரை, வணக் காப்பாளர் பொன்பிருந்தா குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடு பட்டனர். அசன் முஹமது மைதீனுக்கு சொந்தமான பருத்தி விளை நிலத்தில் 1 வயதுடைய பெண் காட்டுப்பன்றியை இரவு 11:30 மணிக்கு சுட்டுக்கொன்றனர். காட்டுப்பன்றியின் உடல் ரசாயனம் துாவி புதைக்கப்பட்டது.