உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பயிரை சேதமாக்கிய காட்டுப்பன்றியை சுட்டு கொன்ற வன அதிகாரிகள்

பயிரை சேதமாக்கிய காட்டுப்பன்றியை சுட்டு கொன்ற வன அதிகாரிகள்

காரியாபட்டி: பிசிண்டியில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு பன்றியை வன அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். பிசிண்டியில் விளை நிலங்களில் காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது குறித்து விவசாயிகள் வன அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அப்பகுதியில் வத்திராயிருப்பு வனச்சரகர் ரவீந்திரன் தலைமையில் அலுவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை 11: 40 மணிக்கு அங்கு சுற்றி திரிந்த இரண்டரை வயதுடைய காட்டுப்பன்றியை சுட்டுக் கொன்றனர். இதன் எடை 60 கிலோ இருக்கும். இதனை அங்குள்ள காட்டுப் பகுதியில் புதைத்தனர். பன்றியை சுட்டுக்கொன்றது அப்பகுதி விவசாயிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியது. முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை