உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் மடிக்கணினி திட்டங்கள் நிறுத்தம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

தி.மு.க., ஆட்சியில் தாலிக்கு தங்கம் மடிக்கணினி திட்டங்கள் நிறுத்தம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

சிவகாசி: பெரும்பான்மையுடன் சிறுபான்மை மக்கள் இணைந்து வாழ லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., விற்கு ஓட்டளியுங்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.சிவகாசியில் மேற்கு மாவட்டம் சிவகாசி சட்டசபை தொகுதி சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி, நடிகை விந்தியா, தலைமை கழக பேச்சாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினர்.முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: மத நல்லிணக்கத்தை உருவாக்க, சிறுபான்மை மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைப்பதற்கு பெரும்பான்மையுடன் சிறுபான்மை மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு வரும் லோக்சபா தேர்தலில் பழனிசாமி நிறுத்தும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து, வரி யினங்களும் கூடுதலாகி விட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்து தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை எல்லாம் நிறுத்திவிட்டனர், என்றார்.கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா பேசியதாவது: ஆளத் தெரியாத தி.மு.க.,வால் தற்போது ஒவ்வொரு தமிழனுக்கும் தலைக்கு 2 லட்சம் கோடி கடன் உள்ளது. தி.மு.க.,வின் போலியான தேர்தல் வாக்குறுதியை கேட்டு ஏமாந்து ஓட்டு போட்டது மக்கள்தான், என்றார்.மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய்ஆனந்த், மகளிரணி செயலாளர் சுபாஷினி, பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், ராஜ அபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், வெங்கடேஷ், கருப்பசாமி, கட்சியினர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் பலராம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை