உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

விருதுநகர்: விருதுநகரில் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நிறுவனர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடந்தது.இதில் 2009 ஜன. 1க்கு பின் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்குதல், நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு தொகையை திரும்ப வழங்குதல், ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வினை பழைய முறைப்படி வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மேலும் அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநிலத்தலைவர் ராமு, பொதுச்செயலாளர் மகேந்திரன், துணைத் தலைவர் வேல்முருகன் உள்பட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்