உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அரசு அலுவலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 அரசு அலுவலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடந்தது. அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பகவதியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் அய்யாதுரை, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, சுகாதார ஆய் வாளர்கள் நலச்சங்கம் முன்னாள் மாநிலத் தலைவர் துரைச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தினர். அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட பொருளாளர் பாண்டி, துணைத் தலைவர் ஆறுமுகம் உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை