விதவை, ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினர்களுக்கு குறைதீர் கூட்டம்
விருதுநகர் : விருதுநகரில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாகசமூகநலத்துறை சார்பில் விதவை, ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினர்களுக்கானசிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. இப்பெண்கள்எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழிற்பயிற்சிவழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக விதவை பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாகமாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம், விதவை பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களில் முதற்கட்டமாக, 324 பெண்களிடம் சிறப்பு கள ஆய்வு செய்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில்102 பெண்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து, தங்களின் குறைகளை தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா, மாவட்ட சமூக நல அலுவலர் திலகம் பங்கேற்றனர்.