உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கைதிகளுக்கு தனி வார்டுகள் இல்லாத மருத்துவமனைகள்

கைதிகளுக்கு தனி வார்டுகள் இல்லாத மருத்துவமனைகள்

விருதுநகர்:தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் கைதிகளுக்கான தனி வார்டு இல்லை. இதனால் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் கைதிகள் தப்பி ஓடுவது, தாக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் அதிரித்துள்ளன.திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டனம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதியதாக மருத்துவக்கல்லுாரிகள் 2022 ஜன. 12ல் துவங்கப்பட்டன. இந்த மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் இல்லாததால் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான பாதுகாப்பு பணியில் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பணி முடிந்து சென்று மற்றவர் பணிக்கு வரும் இடைவேளையில் சில கைதிகள் தப்பி விடுகின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் சக நோயாளிகளை பார்க்க வருவது போல வந்து கைதிகளை மருத்துவமனையில் வைத்து தாக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இது போன்ற அசாம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் சிறையில் இருந்து சிகிச்சை பெறவரக்கூடியவர்களை பாதுகாப்பு கருதி கைதி வார்டு உள்ள மற்ற மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுஉள்ளது. கைதி வார்டு இல்லாத அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் தனி வார்டு அமைப்பதற்கான பணிகளை அரசு உடனடியாக துவக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி