உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டையில் வீட்டிற்கு சீல்

அருப்புக்கோட்டையில் வீட்டிற்கு சீல்

அருப்புக்கோட்டை : சென்னையில் போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தி வந்த கார்த்திக், வெங்கடேசனை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தில் உள்ள நண்பர்களான முருகன், லட்சுமி நரசிம்மன் வீட்டில் இருந்து கொண்டு வந்ததாக கூறியுள்ளனர். அவர்களும் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.மதுரை வில்லாபுரம் முருகன் 2 ஆண்டுகளுக்கு முன் கோவிலாங்குளத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து சித்த வைத்தியம் பார்த்தார். அவருடன் நண்பர் லட்சுமி நரசிம்மனும் இருந்துள்ளார்.சென்னை போலீசார் நேற்று கோவிலாங்குளத்தில் அவர்கள் வீட்டை சோதனை செய்து சீல் வைத்தனர். அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., மதிவாணன், போதை பொருள் தடுப்பு பிரிவு ஏ. எஸ். பி., சண்முகசுந்தரம் விசாரித்தனர்.

சிவகங்கையிலும் பறிமுதல்

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் பகுதி ஒரு வீட்டில் சோதனை செய்த போலீசார் ஒரு கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டில் இருந்தவரிடமும் அதை அவருக்கு தந்த கோவை நண்பரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை