உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சியில் அதிகரித்துள்ளஇடைத்தரகர்கள் தொல்லை

நகராட்சியில் அதிகரித்துள்ளஇடைத்தரகர்கள் தொல்லை

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் இடைத்தரகர்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் திண்டாடும் சூழல் உள்ளது.விருதுநகர் நகராட்சியை சுற்றிலும் அலுவலக வேலை நேரங்களில் அலுவலகத்திற்கு சம்மந்தமில்லாமலும், வரி செலுத்த வருவேராக இல்லாமலும் சில நபர்கள் சுற்றி திரிகின்றனர். இவர்கள் சான்று உள்ளிட்ட தேவைகளுக்காக வருவோரிடம் பேசி, அதிகாரிகளை தெரியும் என்று கூறி லாவகமாக பணத்தை கறக்கின்றனர். இந்த இடைத்தரகர்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும் இவர்களின் தொல்லை குறையவில்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.நகராட்சியை தேவையின்றி சுற்றி திரியும் இந்த இடைத்தரகர்களை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு தகவல் பலகைகள் வந்து செல்வோருக்கு நன்கு தெரியும் படி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ