கமுதி விலக்கு நான்கு வழிச்சாலை பாலப்பணிகள் ஆய்வு
திருச்சுழி : திருச்சுழி அருகே கமுதி விலக்கு முதல் நான்கு வழிச்சாலை பணிகள் மற்றும் பாலப்பணிவுகள் முடிவுற்ற நிலையில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.திருச்சுழி அருகே நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி வழியாக வாலிநோக்கம் வரை உள்ள 2 வழிச்சாலைகள் 4 வழி சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதில், கமுதி விலக்கு பகுதியில் இருந்து 36.40 கோடி நிதியில், பணிகள் துவங்கப்பட்டது.. பணிகள் விறு விறு என நடந்த நிலையில் 7 பாலப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. ரோட்டின் இடது புறம் 6 கி.மீ., சாலை அகலப்படுத்துப்பட்டுள்ளது. வலது புறம் உள்ள 6 கி.மீ., தூரமுள்ள சாலையில் 3 கி. மீ., தூரம் அகலப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களும் அறிவுறுத்தினார். பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். உடன், உதவி கோட்ட பொறியாளர் முத்துசாமி, உதவி பொறியாளர் தினேஷ் குமார் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.