மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று வட்டார பாசன பகுதிகளில் தரிசு நிலங்களிலும் சாகுபடி முழுமை அடைந்துள்ளதால் மேய்ச்சல் மாடுகளுக்கான தீவன சிக்கல் அதிகரித்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர் வரத்தினை ஆதாரமாக கொண்டு ராஜபாளையம், சேத்துார், தளவாய்புரம், தேவதானம், முகவூர் பகுதிகளில்சுற்றியுள்ள கண்மாய் பாசன பகுதிகளில் நெல் விவசாயம் அதிகம்.இந்நிலையில் தற்போது தரிசாக இருந்த நிலங்கள் பாசன பகுதிகளாக மாற்றி வைத்துள்ளனர்.ஏற்கனவே சேத்துார், தளவாய்புரம் பகுதிகளில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேய்ச்சல் மாடுகளை கிடைகளுக்காக பலரும் குழுவாக வளர்த்து வருகின்றனர்.முன்பிருந்த மேய்ச்சல் நிலங்கள் பெரும்பாலும் குடியிருப்புகளாகவும், அரசின் பயன்பாட்டிற்காகவும் வகை மாற்றப்பட்டதாலும், மலை ஒட்டிய வனப்பகுதிகளில் மேச்சலுக்கு தடை செய்யப்பட்டதாலும் தீவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.தற்போது தண்ணீர் செழிப்பால் தரிசாக விடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் சாகுபடி முழுதாக நடந்து வரும் நிலையில் மலை மாடுகள் வளர்ப்போர் தீவன பற்றாக்குறை சிக்கலுக்கு உள்ளாவதாக கவலை தெரிவித்துள்ளனர்.மலை ஒட்டிய வனப்பகுதிக்குள் மேய்ச்சல் உரிமை வழங்கி மலை மாடுகள் வளர்ப்போருக்கு வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
13 hour(s) ago
13 hour(s) ago