உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பாராக மாறும் இருக்கன்குடி அணை

 பாராக மாறும் இருக்கன்குடி அணை

சாத்துார்: இருக்கன்குடி அணையில் தெரு விளக்குகள் சேதம் அடைந்து இருள் சூழ்ந்துள்ளதால் சமூக விரோதிகள் பராக மாற்றி வருகின்றனர். அணையின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, தார் சாலை அமைக்கப்பட்டது. எல்.இ.டி தெரு விளக்குகளும் பொருத்தப்பட்டது. விளக்குகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டனர். இரவு நேரத்தில் அணைப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சமூக விரோதிகள் அணைப்பகுதியை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் அணையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலாளிகளும் போலீசாரும் கையில் விளக்குடன் கண்காணிக்கும் நிலை உள்ளது. அணையின் கரைப்பகுதியிலும் அணையின் மேலும் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்பட்டால் சமூகவிரோதிகளில் நடமாட்டம் குறையும் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வசதியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை