உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நகை, அலைபேசி திருட்டு

 நகை, அலைபேசி திருட்டு

சாத்துார்: சாத்துார் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாபு.இவர் மனைவி கிருஷ்ணவேணி 38,பட்டாசு ஆலை தொழிலாளி. நவ. 18 ல் வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு கிருஷ்ணவேணி வேலைக்கு சென்றார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ஆண்ட்ராய்டு அலைபேசி, பீரோ லாக்கரில் வைத்திருந்த நெக்லஸ், வளையல், கம்மல், மாட்டல் என மொத்தம் 8 அரை பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. சாத்துார் தாலுகா போலீசார் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !