உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிறந்தது கார்த்திகை; ஒலித்தது சரண கோஷம்

பிறந்தது கார்த்திகை; ஒலித்தது சரண கோஷம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற் கொண்டனர்.நேற்று காலை மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஐயப்பன் சன்னதி, பழனி ஆண்டவர் கோயில் உட்பட நகரின் பல்வேறு தெருக்களில் உள்ள கோயில்களுக்கு அந்தந்த பகுதி ஐயப்ப பக்தர்கள், அதிகாலையில் குளித்து கருப்பு உடை அணிந்து வந்தனர். பின்னர் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். தங்களது குரு சுவாமிகள் மூலம் மாலை அணிந்தும் விரதத்தை துவக்கினர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் ஐயப்பன் சன்னதியில் 56வது ஆண்டு கார்த்திகை திருவிழா நேற்று முதல் துவங்கியது. இதனையடுத்து தினமும் இரவு 7: 00 மணிக்கு ஐயப்பன் சன்னதியில் பஜனை வழிபாடும், ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மடவார் வளாகம் தெற்கு ரத வீதியில் உள்ள ஐயப்பன் மண்டபத்தில் 34 வது ஆண்டாக அன்னதானம் தினமும் மதியம் 12:00 மணி முதல் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் செய்துள்ளனர்.அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், ஆனந்த ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். இந்த மாதத்தில் முருகனுக்கும் விரதம் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்வர். கார்த்திகை மாதம் பக்தர்களை ஆன்மீக வழியில் ஈர்க்கும் மாதம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை