கேரள மாவோயிஸ்ட் வழக்கு: நவ. 27க்கு ஒத்திவைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்,:போலி முகவரி சான்றிதழ் கொடுத்து சிம் கார்டு வாங்கிய வழக்கில் கேரள மாவோயிஸ்டுகள் இருவர் மீது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணை நவ. 27க்கு ஒத்தி வைக்கப்பட்டது.2016ல் சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவரின் அடையாள அட்டை ஜெராக்சை போலி முகவரி சான்றாக கொடுத்து சிம்கார்டு வாங்கியதாக கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் ஷைனி, அனுப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.நேற்று வாய்தாவில் ஷைனி ஆஜராகவில்லை. கோவை சிறையில் இருக்கும் அனுப் மேத்யூ ஜார்ஜ் வீடியோ கான்ப்ரன்ஸ் முறையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணையை நவ., 27க்கு நீதிபதி பகவதி அம்மாள் ஒத்தி வைத்தார்.