உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோல்வார் பட்டி இருக்கன்குடி அணைகள் திறப்பு

கோல்வார் பட்டி இருக்கன்குடி அணைகள் திறப்பு

சாத்துார் : சாத்துார் அருகே கோல்வார்பட்டி இருக்கன்குடி அணைகள் நேற்று திறக்கப்பட்டன.மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால் காட்டாற்று வெள்ளம் காரணமாக அர்ச்சுனா நதியில் கட்டப்பட்டுள்ள கோல்வார்பட்டி அணையும் அர்ச்சுனா நதி வைப்பாறு நதி குறுக்கே கட்டப்பட்டுள்ள இருக்கன்குடி அணையும் முழு கொள்ளளவை நேற்று எட்டியதை தொடர்ந்து நேற்று இரு அணைகளும் திறக்கப்பட்டன.அர்ச்சுனா நதியில் இருந்து நேற்று மாலை 500 கன அடியும் இருக்கன்குடி அணையில் காலை யில் 6000 கன அடி திறக்கப்பட்ட நிலையில் மாலையில் அது 1200 கன அடியாக குறைக்கப்பட்டது.மழைப்பொழிவு குறைந்து வருவதாலும் அணைக்கு வரும் தண்ணீர் அளவை கணக்கிட்டு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை