மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
7 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
7 hour(s) ago
சிவகாசி: மானுார் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாவதால் மேல் நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியவில்லை. இதனால் சிவகாசியில் நான்கு வார்டு மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் முருகன் காலனியில் மானுார் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.இத்தொட்டிக்கு குடிநீர் ஏற்றுவதற்காக முத்துமாரியம்மன் காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, பாப்பன்குளம் கண்மாய் வழியாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் செல்கிறது. இத்தொட்டியின் மூலமாக 15, 16, 23, 24 ஆகிய வார்டுகளுக்கு மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இது அனைவருக்கும் போதாத நிலையில், முத்து மாரியம்மன் காலனி வழியாக மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாய் ஆறு மாதத்திற்கு முன்பு உடைந்துவிட்டது.இதனால் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் அனைத்தும் வெளியேறி கண்மாய்க்குள் வீணாக செல்கிறது. எனவே நான்கு வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் இல்லை. இப்பகுதி மக்கள் அனைவரும் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
7 hour(s) ago
7 hour(s) ago