உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுரை - கல்குறிச்சி டவுன் பஸ் மல்லாங்கிணர் வரை நீட்டிப்பு

மதுரை - கல்குறிச்சி டவுன் பஸ் மல்லாங்கிணர் வரை நீட்டிப்பு

காரியாபட்டி : தினமலர் நாளிதழில் செய்தி எதிரொலியாக மதுரையில் இருந்து கல்குறிச்சி வரை இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் மல்லாங்கிணர் வரை நீட்டிப்பு செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.மதுரையில் இருந்து கல்குறிச்சிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கல்குறிச்சியில் பயணிகளை இறக்கி விட்டு, 30 நிமிடத்திற்கு மேலாக ஓய்வில் இருந்து வந்தது.இதையடுத்து கல்குறிச்சியிலிருந்து 4 கி.மீ., தொலைவில் மல்லாங்கிணர் வரை இயக்கினால் அப்பகுதி பயணிகள் பயன்பெறுவதுடன், வருவாய் கிடைக்கும் என தொடர்ந்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.செய்தி எதிரொலியால் நேற்று முன்தினம் மல்லாங்கிணர் வரை டவுன் பஸ்சை நீட்டிப்பு செய்து பஸ் போக்குவரத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். இதனால் மல்லாங்கிணர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை