மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி
15 minutes ago
சிப் டூ ஸ்டார்ட் அப் ஆய்வக திறப்பு விழா
16 minutes ago
சிவகாசியில் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை முயற்சி
17 minutes ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஸ்ரீராம ஐயப்ப பக்த ஸபா டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ மகா ருத்ர மகா யாக, மகா சிவாராதனம், ஐயப்பன் லட்சார்ச்சனை பொன்விழா அக்ரஹாரம் நடுத்தெரு ஸ்ரீ ராமமூர்த்தி ஸ்வாமி பஜனை மடத்தில் டிச.25 முதல் 28 வரை நடக்கிறது. டிச.25 காலை 6:00 மணிக்கு குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. காலை 9:00 மணி முதல் 12:00 வரை ஏகாதச ருத்ர ஜபம், இரண்டாம் ஆவிருத்தி அபிேஷகம், தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும். மாலை 5:00 மணி முதல் 6:30 வரை ருத்ர க்ரமார்ச்சனை, விஷ்ணு சகஸ்ரநாபாராயணம், இரவு 7:30க்கு ஐயப்பன் வீதி உலா நடக்கின்றன. டிச. 26 காலை 6:00 மணி முதல் மகன்யாச பூர்வக ஏகாதச ஜபம், அபிேஷகம், தீபாராதனை நடக்கின்றன. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கின்றன. மாலை 6:30 மணிக்கு ருத்ர க்ரமார்ச்சனை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடக்கின்றன. இரவு 8:00 மணிக்கு ஸ்ரீராம ஐயப்ப பக்த ஸபையினரின் பஜனை நடக்கிறது. டிச.27 ல் காலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், ஸ்ரீ ருத்ர ேஹாமம், வசோர்தாரா ஹோமம், மஹா பூர்ணாகுதி, 121 கலச அபிேஷகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 5:30 மணி முதல் 6:30 வரை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும், மாலை 6:45 மணி முதல் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. டிச.28 காலை 6:00 மணி முதல் 50ம் ஆண்டு ஸ்ரீ ஐயப்பன் லட்சார்ச்சனை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், இரவு 7:00 மணிக்கு ஆஞ்சநேய உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
15 minutes ago
16 minutes ago
17 minutes ago