உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலையில் ரோட்டை பெயர்த்து கிடப்பில் போட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம்

நான்கு வழிச்சாலையில் ரோட்டை பெயர்த்து கிடப்பில் போட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம்

காரியாபட்டி : மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் படுமோசமாக இருந்த இடத்தில் ரோட்டை பெயர்த்து, சீரமைக்காமல் கிடப்பில் போட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், விபத்து அச்சத்தில் உள்ளனர்.மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணிகள், அடிப்படை வசதிகள் சரிவர கிடையாது. ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாகி படுமோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து ரோடு சீரமைக்காமல் டோல் கேட் கட்டணம் வசூலிக்க கூடாது என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. ரோடு டெண்டர் விடாமல் இருந்ததால் பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது டெண்டர் விடப்பட்டு ஆங்காங்கே சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படுமோசமாக இருந்த சில இடங்களில் சீரமைப்பு பணிக்காக ரோட்டை பெயர்த்து போட்டனர். வரி வரியாக ரோடு இருப்பதால் டூவீலர்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுகின்றனர். கார் உள்ளிட்ட வாகனங்கள் குலுங்கி குலுங்கி செல்வதால் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். அதிவேகமாக வரும் வாகனங்கள், கவனிக்காமல், பெயர்த்துப் போட்ட ரோட்டில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து சில நேரம் விபத்தில் சிக்குகின்றனர். மாத கணக்கில் கிடப்பில் போட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை