நகராட்சி புதிய குடிநீர் இணைப்பு கமிஷனர் அறிவிப்பு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் செய்தி குறிப்பு: அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட எம்.டி.ஆர்., நகர் கிழக்கு, ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்புகளின் சோதனை ஓட்டம் நடந்தது.தற்போது சோதனை ஓட்டம் முடிவு பெற்று பொதுமக்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கையில் உள்ளது.குடிநீர் குழாய் இணைப்பு பெற விரும்பும் மக்கள் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக மனு செய்து பயன்பெறும் படியும், முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும், இது தொடர்பாக வேறு நபர்கள் யாரேனும் மக்களிடம் பணம் கோரி வந்தால், தர வேண்டாம் எனவும், கேட்டுக் கொள்கிறார்.