உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவக் கல்லுாரிகளில் தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு டாக்டர்களின் விவரங்கள் சரிபார்ப்பு

அரசு மருத்துவக் கல்லுாரிகளில் தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு டாக்டர்களின் விவரங்கள் சரிபார்ப்பு

விருதுநகர்: அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனைகளில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு பணிகளை துவக்கியுள்ளனர். இந்த ஆய்வில் துறை வாரியாக டாக்டர்களின் விவரங்கள், வேலை நாட்கள் ஆகியவற்றை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.தமிழகத்தில் 36 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பணிபுரியும் டாக்டர்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையத்தில் பதிவு செய்யப்படுகிறது.இவர்களின் வருகை பதிவு, வேலை நாட்கள், விடுப்புகள் குறித்த விவரங்கள் ஆதார் பயோமெட்ரிக் மிஷின் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தால் அரசு மருத்துவக்கல்லுாரிகளில் உள்ள டாக்டர்களின் அனைத்து விவரங்களை சரிபார்க்கும் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம்.ஆனால் மருத்துவமனையின் அனைத்து செயல்பாடுகளையும் ஆன்லைன் மூலமாக மருத்துவ ஆணையம் கண்காணித்து வருவதால் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு பணிகளை செய்கிறது.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் முதல் ஒரு அரசு மருத்துவக்கல்லுாரிக்கு இரு நாட்கள் என தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகள் ஆய்வு பணிகளை துவக்கியுள்ளனர். இந்த ஆய்வில் ஒவ்வொரு துறை வாரியாக நியமிக்கப்பட்ட டாக்டர்களின் முழு விவரம், வேலைநாட்கள், விடுப்பு உள்பட அனைத்து விவரங்களையும் சரிபார்க்கும் பணிகள் நடக்கிறது.இதில் மருத்துவமனையில் உள்ள தற்போதைய டாக்டர்களின் எண்ணிக்கை, கூடுதலாக தேவைப்படும் டாக்டர்களின் எண்ணிக்கை குறித்தும் நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி