உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெரும்பான்மையான வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு

பெரும்பான்மையான வார்டுகளுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு

சிவகாசி: ''குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டு பெரும்பான்மையான வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவில்லை. என,'' சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் திமு.க., கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க.,வை சேர்ந்த சங்கீதா மேயராக உள்ளார். நேற்று மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடந்தது.துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம்

ஸ்ரீநிகா, தி.மு.க.,: மாநகராட்சிக்குரிய பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்காக பணம் செலவழித்தும் எந்த பள்ளியிலும் வேலை செய்யவில்லை.சேதுராமன் தி.மு.க,: திருத்தங்கல் பகுதி முழுவதுமே கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. வாறுகால் முறையாக துார் வாருவது இல்லை. கொசுப் புழு ஒழிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியத்தினர் கண்ட இடங்களில் ரோட்டை தோண்டி விடுகின்றனர். ஆனால் மீண்டும் சீரமைப்பதில்லை. கவுன்சிலர்கள் கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்.குருசாமி, தி.மு.க.,: துாய்மை பணி மேற்கொள்ளும் ஒப்பந்தம் எடுத்த நபர் மாநகராட்சி வாகனத்தில் மாநகராட்சி பெயரை அழித்துவிட்டு தனது நிறுவனத்தின் பெயரை எழுதியுள்ளார். இதற்கு யார் அனுமதி கொடுத்தது. நகர் முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது.துரைப்பாண்டியன், தி.மு.க.,: கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் எப்போது முடிவடையும்.ஞான ரஞ்சித் ராஜா, தி.மு.க.,: குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான வார்டுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவில்லை.மேயர்: அனைத்து வார்டுகளுக்கும் ஒரே மாதிரி தான் நிதி ஒதுக்கப்படுகின்றது. வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.குமரி பாஸ்கர், பா.ஜ.,: பைபாஸ் ரோட்டில் சென்டர் மீடியன் அருகே ரோடு சேதமடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.நிலானி, தி.மு.க.,: வார்டில் சுகாதார வளாகம், ரோடு சேதமடைந்துள்ளது.மகேஸ்வரி, தி.மு.க.,: ரிங் ரோடு போடும் பணி எப்போது துவங்கப்பட உள்ளது.ரமேஷ், உதவி பொறியாளர்: வருவாய் துறை சார்பில் நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளது விரைவில் ரிங் ரோடு அமைக்கும் பணி துவங்கும்.சாமுவேல், சுயே.,: பயன்பாட்டின்றி உள்ள பழைய வாகனங்கள், இரும்பு குழாய்களை பொது ஏலம் விட வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை