காட்டுப்பன்றியால் நாற்றங்கால் சேதம்
காரியாபட்டி : நாசர் புளியங்குளத்தில் நாற்றங்காலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். காரியாபட்டி அருகே நாசர் புளியங்குளம் பகுதியில் பயிரிட்டு இருந்த நாற்றங்காலை காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக சென்று முற்றிலும் சேதப்படுத்தின. ஆயிரக்கணக்கில் செலவு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.