உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குலசேகரப்பேரி கண்மாய் தண்ணீரை திறக்க தயங்கும் அதிகாரிகள்

குலசேகரப்பேரி கண்மாய் தண்ணீரை திறக்க தயங்கும் அதிகாரிகள்

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே குலசேகரப்பேரி கண்மாய் தண்ணீரை திறந்து விட்டு விளைந்த நெல்லை அறுவடை செய்ய உதவும் படி கோரிக்கை வைத்து, ஐந்து நாள் கடந்தும் நடவடிக்கை இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் கிராமத்தில் குலசேகரப்பேரி கண்மாய் 120 ஏக்கர் பாசன பரப்பை கொண்டது. கண்மாயை ஒட்டி 60 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம் செய்து பத்து நாளில் அறுவடைக்கு தயாராகும் நிலை உள்ளது.இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கண்மாய் மறுகால் பாய்கிறது. இதனால் கண்மாயில் இருந்து தண்ணீர் கரைகள் வழியே ஊற்றெடுத்து வயல்களில் நிரம்பி வருகிறது. வயல்களில் நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை தொடங்க வயல்களில் ஈரம் குறைய வேண்டும். இதற்கு தண்ணீரை குறிப்பிட்ட அளவு குறைக்க வேண்டும். இதேநிலை நீடித்தால் அறுவடை மிஷின் மூலம் ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் அதிக செலவாகும்.இதுபற்றி ஐந்து நாட்களாக கோரிக்கை விடுத்தும் மீன் பாசி குத்தகைதாரர் மறுப்பதுடன், அதிகாரிகளும் கண்மாயை திறக்காமல் உள்ளதால் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராமராஜ் கூறியதாவது: கடந்த வருட பருவமழை தாமதத்தை அடுத்து பாதி அளவு நெற்பயிரும் மீதி கரும்பு, மக்காச்சோளம் பயிரிட்டோம். பாசன பரப்பு மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் தண்ணீர் பாய்ச்சாமலேயே விவசாய நிலங்களுக்கு கரை வழியாக ஊற்றெடுத்து சென்று வருகிறது.இது குறித்து முறையிட்டால் பொதுபணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்தும் கண்மாய் தண்ணீரை குறைக்கவில்லை. அதிக செலவை தவிர்க்க நெற்பயிற் விவசாயிகள் அறுவடை வரை தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரியுள்ளோம். ஏற்கனவே 5 நாள் கடந்துள்ள நிலையில் நடவடிக்கை இல்லையென்றால் கலெக்டரிடம் சென்று போராட உள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ