மேலும் செய்திகள்
மூளைச்சாவு அடைந்த நபர் உடல் உறுப்புகள் தானம்
18-Sep-2024
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்த ராமர் 47, உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இவரின் உடலுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.சாத்துாரைச் சேர்ந்தவர் ராமர். இவர் பட்டாசு ஆலையில் பணிபுரிகிறார். இவர் செப். 30ல் சாலை விபத்தில் காயமடைந்து சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி செப். 4ல் மூளைச்சாவு அடைந்தார். அவரது உறவினர்கள் சம்மதத்துடன் ராமர் உடலில் இருந்து கல்லீரல், இரண்டு கண்கள், சிறுநீரகங்கள், தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதன் மூலம் ஆறு நோயாளிகள் பலன் அடைந்துள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை டீன் ஜெயசிங் தலைமையில் மருத்துவர்கள் சையத் பஹாவூதீன் உசேனி, சேகர், கண்காணிப்பாளர் லதா, உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது சுல்தான் இப்ராஹிம், ஒருங்கிணைப்பாளர் ஜெகப்பிரியா ஆகியோர் செய்தனர்.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவனைக்கு முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்த ராமரின் உடலுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் மாலை அணிவித்து மெழுகு வர்த்தி ஏந்தி மரியாதை செலுத்திய பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
18-Sep-2024