உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நம்ம ஊர் திருவிழா: பங்கேற்க அழைப்பு

நம்ம ஊர் திருவிழா: பங்கேற்க அழைப்பு

விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகம், கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு 'நம்ம ஊர் திருவிழா' என்ற கலைத்திருவிழா இன்று(ஜன. 15), நாளை (ஜன. 16) மாலை 6:00 மணிக்கு முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.இன்று விருதுநகர் கல்லுாரி ரோட்டில் உள்ள வி.என்.ஆர்., பூங்கா, சிவகாசி மாநகராட்சி அலுவலகம் அருகே ரத்தினம் நகர், ராஜபாளையம் - ஜவஹர் மைதானம், அருப்புக்கோட்டை அஜீஸ் நகர் பார்க் அருகில், ஸ்ரீவில்லிப்புத்துார் கோவிந்த நகர், சாத்துார் பெரியார் பூங்கா, நாளை விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், சிவகாசி கார்நேசன் பஸ் ஸ்டாண்ட் அருகே சிறுவர் பூங்கா, ராஜபாளையம் மலையடிப்பட்டி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, டி.பி., ரோடு சந்திப்பு, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளி, சாத்துார் பைபாஸ் ரோடு முக்குராந்தல், சாத்துார் பெரியார் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை