உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆர்.டி.இ., திட்டத்திற்கான நிதி தாமதம் பெற்றோர் பரிதவிப்பு

ஆர்.டி.இ., திட்டத்திற்கான நிதி தாமதம் பெற்றோர் பரிதவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் (ஆர்.டி.இ.,) தனியார் பள்ளிகளில் 25 இட ஓதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான நிதியை அரசு வழங்க தாமதிப்பதால் அவர்களுக்கான உபகரணங்களை வாங்க முடியாமல் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.தமிழகத்தில் 15 ஆண்டுகளாக கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்கை வழங்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்திலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்காக விண்ணப்பித்து பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு இந்தாண்டு நிதியை பள்ளிகளுக்கு வழங்க தாமதித்து வருகிறது. இதனால் மாணவர்களின் படிப்பிற்கு தேவையான பொருட்கள், உபகரணங்களை வாங்க முடியாமல் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர். ஆர்.டி.இ., திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்புகள் கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டு காலதாமதமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இத்திட்டத்தில் சேர்ந்த மாணவர்களுக்கான நிதியை வழங்க அரசு காலதாமதம் செய்வது பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.எனவே விருதுநகர் மாவட்டத்தில் ஆர்.டி.இ., திட்டத்திற்கான நிதியை கேட்டு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை