மேலும் செய்திகள்
ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
04-Sep-2025
சாத்துார்: சாத்துார் இருக்கன்குடி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அறிவிப்போடு நிற்பதால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். விரைவில் பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். சாத்துார் நென்மேனி ரோட்டில் ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த கிராஸிங் நாள் ஒன்றுக்கு 30க்கும் மேற்பட்ட முறை மூடப்படுகிறது. இருக்கன்குடியில் இருந்து சாத்துாருக்கு தினந்தோறும் செல்லும் மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே துறை சார்பில் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகு எவ்வி பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
04-Sep-2025