உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வீரசோழனில் மதுகுடிக்க பணம் தராததால் பிளக்ஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய கொங்கு செல்வம் 20, உட்பட இருவரை போலீசார் தேடுகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் புன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த லிங்கப்பாண்டி 24. நரிக்குடி வீரசோழனில் பிளக்ஸ், பேனர் கடை நடத்தி வருகிறார். வீரசோழன் தெற்கு தெருவை சேர்ந்த கொங்கு செல்வம் , மது குடிக்க லிங்கப்பாண்டியிடம் பணம் கேட்டார். கொடுக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த கொங்கு செல்வம் நேற்று காலை நண்பரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து பிளக்ஸ் கடையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசி தப்பிச்சென்றனர். அது அங்குள்ள படிக்கட்டில் விழுந்து தீ பற்றியது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. தப்பி ஓடிய இருவரையும் வீரசோழன் போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை