உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடல்

விருதுநகர், : விருதுநகரில் விருதை விழுதுகள் அமைப்பின் 5 ஆயிரமாவது மரக்கன்று நடும் நிகழ்வு வணிகவரித்துறை அலுவலகத்தில் நடந்தது. அமைப்பு தலைவர் மித்ரு நாகேந்திரன் தலைமை வகித்தார்.குழும செயலாளர் மகேந்திரபாண்டி, பொருளாளர் முத்துராமலிங்கம், நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜேந்திரன், சந்திரமோகன், விருதை முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்று மரங்களை நட்டனர்.இதில் நேற்று 10 மரங்கள் நட்டதோடு 5000வது மரம் நடும் நிகழ்வு நடந்தது. இந்த அமைப்பு சார்பில் நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி