மேலும் செய்திகள்
சாலையோர கிணறுக்கு தடுப்புச்சுவர் அமைப்பு
24-Jan-2025
மயங்கி விழுந்து சாவுசாத்துார்: சாத்துார் மம்சாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 44. நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு இவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் ராஜகோபாலின் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து குண்டலகுத்தூர் சென்றார். குண்டலகுத்துார் பஸ் ஸ்டாப் அருகில் சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கிணற்றில் மூழ்கி பலிராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார் புரத்தை சேர்ந்தவர் நாகராஜ் 20, ஒரு கை, ஒரு கால் செயல்படாத மாற்றுத் திறனாளி. வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் உடலை மீட்டனர். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jan-2025