உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பண மோசடி; வாலிபர் மீது வழக்குஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா நகரை சேர்ந்தவர் சாலமோன் ராஜா,36, . இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 2021ல் கடன் பெற்று மாதத் தவணை செலுத்தி வந்தார். கடனை மொத்தமாக அடைப்பதற்கு பைனான்ஸ் நிறுவன ஊழியர் சுரேஷ்குமார், 35, என்பவருக்கு ஜி.பே. மூலம் ரூ 75 ஆயிரத்து 132 அனுப்பி உள்ளார். ஆனால், அதனை பைனான்ஸ் நிறுவனத்தில் சுரேஷ்குமார் செலுத்தாமல் ஏமாற்றி உள்ளார். சாலமோன் ராஜா பைனான்ஸ் நிறுவனத்தில் கேட்டபோது சுரேஷ்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சுரேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.முன்விரோதத்தில் தாக்குதல்சிவகாசி: சிவகாசி எரிச்சநத்தம் அம்பேத்கர் காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் 37. பேண்ட் - செட் தொழில் நடத்தி வரும் இவர் அதே ஊரைச் சேர்ந்த கணேசனின் பேண்ட் செட் குழுவிற்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்த பின்னர், அந்த குழுவில் உள்ள செவலுாரைச் சேர்ந்த ஹரிஹரசுதன் 20, அரசம்பட்டி சங்கர் கணேஷ் 19, ஆகியோர் முன் விரோதம் காரணமாக சக்திவேலை தகாத வார்த்தை பேசி அடித்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.சந்தேகத்தில் தாக்குதல்நரிக்குடி: நரிக்குடியில் இரும்பு கம்பி கடை நடத்தி வருபவர் விருதுநகர் சின்ன பேராளியைச் சேர்ந்த மார்நாடு 38. தன் தங்கையுடன் பழகி வருவதாக விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்த சூரியபாண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சூரிய பாண்டி உறவினர்கள் நாகு, பாலா, மணி பாண்டி நரிக்குடிக்கு சென்று, கம்பி வாங்குவது போல் நடித்து, ரீப்பர் கட்டையால் அடித்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் மாயம்காரியாபட்டி: மல்லாங்கிணர் முடியனூரைச் சேர்ந்த சுப்புலட்சுமி. இவரது மகள் சாந்தி 22. அங்குள்ள தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். வீட்டில் இருந்தவர் திடீரென காணாமல் போனார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவர் தற்கொலைவிருதுநகர்: காளபெருமாள்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி 62. இவரின் மனைவி 6 மாதம் முன்பு இறந்துவிட்டதால் மன வேதனையில் இருந்துள்ளார். ஜன. 23 காலை 9:00 மணிக்கு வெளியே சென்றவர், மதியம் 1:00 மணிக்கு கோட்டூர் - பொம்மையாபுரம் ரோட்டின் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* காரியாபட்டி: காரியாபட்டி கோபாலகிருஷ்ணபரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் 45. இவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் இருந்துள்ளது.தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி